எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர்...

மனித இயல்புகளின் மீது புன்னகையை படரவிட்டவர்...

தமிழ் நவீன இலக்கியவாதிகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றவர்...

தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்...

பழம்பெரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தணி முத்திரையைப் பதித்தவர்....

சுந்தரம் என்ற புனை பெயர் கொண்ட நாவலாசிரியர்...

யார் இவர்? இவர் தான்...

எழுத்தாளர் ஆதவன்..

பிறப்பு :

கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (யுயனாயஎயn) 1942ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார். டெல்லியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் இந்திய ரயில்வேயில் சிறிது காலம் பணியாற்றினார். டெல்லியில் உள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 

குடும்பம் : 

1976ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. ஆதவன் மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம். இவருடைய பிள்ளைகள் சாருமதி, நீரஜா ஆவார். 

எழுத்துப்பணி : 

45 ஆண்டுகளே வாழ்ந்தாலும் நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்படப்போகும் படைப்புகள் பலவற்றை எழுதிச் சென்றிருக்கிறார் ஆதவன்.

1960களில் எழுதத் தொடங்கிய ஆதவன் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் நிறைய எழுதினார். சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், நாடகங்கள் என அனைத்துத் தளங்களிலும் இயங்கினார்.

இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

'தாஜ்மகாலில் பௌர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

தமிழ் எழுத்து மரபில் காணக்கிடைக்காத பல அம்சங்களோடு தமிழ் படைப்புலகிற்குள் பிரவேசித்தவர் ஆதவன்.

இது தவிர இரவுக்கு முன்பு வருவது மாலை, சிறகுகள், மீட்சியைத் தேடி, நதியும் மலையும், கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன், பெண்-தோழி-தலைவி ஆகிய குறுநாவல்களையும்; கனவுக் குமிழிகள், கால் வலி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள், புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் ஆகிய சிறுகதைகளையும், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் ஆகிய நாவல்களையும்; புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படைத்துள்ளார்.

இவரின் முக்கிய படைப்புகள் :

என் பெயர் ராமசேஷன்.

காகித மலர்கள்.

முதலில் இரவு வரும்.

இரவுக்கு முன் வருவது மாலை.

புழுதியில் வீணை.

இறப்பு : 

பல சாதனைகளை நிகழ்த்திய ஆதவன் 1987ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

விருது :

இவரது மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது 'முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Writer ks sundharam history


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->