#BREAKING | ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் திடீர் திருப்பம்!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்எல்ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிபட்டு வருவதாக தகவல் வெளியாகிய நிலையில், கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இரு தினங்களுக்கு முன்  XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவே, எக்கோ பரிசோதனை செய்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். 

தொடர்ந்து நேற்று இரவில் அவருக்கு உடல் நிலை சீரான நிலையில், சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போதைய நிலையில், அவரின் உடல் நலம் தேறி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படவார் என்றும், இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

XBB Corona EVKS Elangovan heath condition info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->