ஒரே நாளில் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.! அதிர்ச்சியில் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 28,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக காவல்துறையில் 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 328 போலிஸாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yesterday 328 police officers affected covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->