கரூரில் பரபரப்பு.! திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீசார்..! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் திருமணமான மறுநாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சித்திரை செல்வனுக்கும், கரூர் மாவட்டம் சின்ன கிணத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை மறுவீட்டு அழைப்பிற்காக சித்திரை செல்பவனுடன் ரம்யா, சின்னகிணத்துப்பட்டிக்கு வந்தார்.

இந்நிலையில் மதியம், வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்குச் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது ரம்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ரம்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரம்யாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young girl commits suicide on the day after her wedding in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->