கழுத்தை நெரித்து இளம்பெண்ணை கொன்று உடல் வனப்பகுதியில் வீச்சு..! தர்மபுரியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் கழுத்தை நெரித்து இளம்பெண்ணை கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று காலை ஒரு பெண் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் முகம் கைப்பை வைத்து மறைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மகள் ஹர்ஷா(23) என்பதும், அவர் ஓசூரில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் ஹர்ஷாவை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை வனப்பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹர்ஷாவை கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசியவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl was murder by strangulation and her body was dumped in the forest in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->