கடைக்கு வந்த பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாலிபர் கைது.!
young man arrested for obscene photos uplode instagram
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த தழுதாளி கிராமத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனால், அலாவுதீனின் மகன் முகமது ஜுபைர் அடிக்கடி கடைக்கு வந்து செல்வார்.
அந்த நேரத்தில் முகமது ஜுபைர் கடைக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களில் தரக்குறைவான வசனங்களையும் எழுதி தனது பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்சி அடைந்த இளம் பெண் ஒருவரின் கணவர் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், பெண்களின் புகைப்படங்கள் அனைத்தும் அலாவுதீனின் மளிகைக்கடையில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, அலாவுதீனின் மகன் முகமது ஜுபைரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், புகைப்படம் குறித்த அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
young man arrested for obscene photos uplode instagram