திருசெந்தூர் அருகே திமிங்கலத்தின் எச்சத்தை வெளிநாட்டிற்கு கடத்திய வாலிபர் கைது.!
young man arrested for smuggling remains of whale to foreign
திருசெந்தூர் அருகே திமிங்கலத்தின் எச்சத்தை வெளிநாட்டிற்கு கடத்திய வாலிபர் கைது.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் விலை உயர்ந்த பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்த முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, குலசேகரப்பட்டினம் போலீஸார் உடன்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சோதனையின் போது சந்தேகப்படும் விதமாக இளைஞர் ஒருவர் நின்றுள்ளார். இதைப்பார்த்த போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த இளைஞர் உடன்குடி புதுமனை பகுதியை சேர்ந்த குமரன் என்பது தெரிய வந்தது.
மேலும், போலீசார் அந்த நபரிடம் சோதனை செய்ததில் அவர் பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் உமிழும் பொருளான "அம்பர் கிரிஸ்" இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், குமரனிடம் இருந்த 2.5கிலோ எடை கொண்ட அம்பர் கிரிஸை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 2.5 கோடி ஆகும். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் அம்பர் கிரிஸையும் ஒப்படைத்தனர்.
இந்த அம்பர்கிரிஷ் வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக உடன்குடி பகுதியில் 19 கிலோ அம்பர் கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
young man arrested for smuggling remains of whale to foreign