ஈரோட்டில் போதை மாத்திரையுடன் உலா வந்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் போதை மாத்திரையுடன் உலா வந்த வாலிபர் கைது.!

கடந்த சில நாட்களாகவே ஈரோடு மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாஸ்திரி நகரில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பதும், அவர் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சோதனை செய்ததில் அந்த வாலிபர் 100 போதை மாத்திரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த  போலீசார் சம்பவம் குறித்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஹரிஷ் என்ற நபரிடம் போதை மாத்திரை வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஸ்ரீநாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ஹரிசை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested with pain medications in erode


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->