திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!!  - Seithipunal
Seithipunal


திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னையில் உள்ள தனியார் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில் ராஜசேகரனுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ராஜசேகரன் தனது திருமணப் புகைப்படங்களை செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதைப் பார்த்த பிரியா, ராஜசேகரனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதன் பின்னர் பிரியா ராஜசேகரனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் இருவரும் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜசேகரின் மனைவிக்கு அனுப்பியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், நான் நேரில் வந்து நீங்கள் என்னுடன் திருமணம் செய்து கொண்ட விவரங்களை சித்ரா குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீஸார் விரைந்து வந்து, ராஜசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man sucide for girl friend see whatsapp status in dindukal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->