ராமநாதபுரம் - காதலியை சந்திக்க முடியாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் - காதலியை சந்திக்க முடியாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர்ன். இவருடைய மகன் அபினேஷ்வரன். இவர் உச்சிப்புளியில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனையகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையே இவருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அபினேஷ்வரன் தனது காதலியை பார்ப்பதற்காக அவ்வப்போது அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அபினேஷ்வரின் நடமாட்டத்தை கண்காணித்த இளைஞர்கள் சிலருக்கு இவர்களது காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. அவர்கள் அபினேஷ்வரனை இனி தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த அபினேஷ்வரன் இன்று அதிகாலை சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர் அபினேஷ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியை சந்திக்க முடியாத விரக்தியில் இருந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide front of train in ramanathapuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->