கிருஷ்ணகிரியில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லமங்கலம் அடுத்த ஜாகிர் ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருக்கும் ஜெகாரப்பள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் மகள் லட்சுமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் தற்பொழுது உள்ளது. 

இந்த நிலையில் லட்சுமி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்தும் வயிற்று வலி பிரச்சனை தீரவில்லை.

இந்த நிலையில் லட்சுமிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாத விரத்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

லட்சுமியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை பெரியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி வயிற்று வலியால் உயிரிழந்தாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமாக..? என விசாரித்து வருகின்றனர். திருமணம் நடைபெற்று 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young married Girl hangs herself in Krishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->