திருப்பூரில் பயங்கரம்... நிர்வாணமாக எரிந்த நிலையில் ஓடி வந்த இளம் பெண் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெத்தம்பாளையம் சாலையில் அமைந்துள்ள பனைப்பாளையம் காட்டுப்பகுதியில் இருந்து நேற்று இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக தீயில் எரிந்த நிலையில் அலறிக் கொண்டு ஓடி வந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூஜா (19) என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் மற்றும் பூஜா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் நேற்று தனியாக காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும், அப்பொழுது லோகேஷிடம் பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பூஜா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அப்பொழுது லோகேஷ் பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் லோகேஷன் தேடி வந்த நிலையில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூஜா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young woman burnt to death for love affair in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->