சிறை சென்று வந்த அண்ணன்- தம்பி! தகராறு ஏற்பட்டதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தம்பி!
younger brother murder yelder brother
திருப்பூர், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 60) இவர் விவசாயம் செய்து, மாடுகள் வளர்த்து வந்தார்.
இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள்கள் வாணிஸ்ரீ வயது 12, இளங்கவி வயது 11. இவர் குடும்பத்துடன் தோட்டத்தில் வசித்து வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் மாடுகளின் பால் கறந்து கொட்டாப்புளிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
கொண்டரசம்பாளையம் விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது உடன்பிறந்த அண்ணன் பழனிசாமி (வயது 63) என்பவர் திடீரென அங்கு வந்து ஈஸ்வர மூர்த்தியை கணிமைக்கும் நேரத்தில் அறிவாளால் தாக்கினார்.
இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தாராபுரம் டி.எஸ்.பி உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வர மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஈஸ்வர மூர்த்தியின் அண்ணன் பழனிசாமியை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்தியதில், பழனிச்சாமிக்கும் ஈஸ்வரமூர்த்திக்கும் பொதுவாக 8 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பிரித்து கொடுக்காததால் ஈஸ்வரமூர்த்திக்கும் பழனிச்சாமிகும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இன்று காலை தம்பி என்று கூட பாராமல் ஈஸ்வரமூர்த்தியை பழனிச்சாமி கொலை செய்து தப்பி ஓடி விட்டார்.
மேலும் போலீசார், தலைமறைவாக உள்ள பழனிச்சாமியை தேடி வருகின்றனர். கடந்த 38 வருடங்களுக்கு முன்பு பழனிச்சாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவருக்கும் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தனர். இந்நிலையில்தான் தற்போது சொத்து பிரச்சனை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஈஸ்வரமூர்த்தியை பழனிசாமி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
younger brother murder yelder brother