கோழியை நாய் கடித்ததால் கோபமடைந்த வாலிபர்.! டான்ஸ் மாஸ்டரை குத்திக் கொன்ற கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கோழியை நாய் கடித்ததால் கோபமடைந்த வாலிபர் டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் டான்ஸ் மாஸ்டர் விஷ்ணு(25). இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் கூலி தொழிலாளி முத்தன் (38). இந்நிலையில் விஷ்ணு வளர்த்து வந்த நாய், முத்தன் வளர்த்து வந்த கோழியை கடித்துள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இன்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த முத்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை குத்தியுள்ளார். 

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் விஷ்ணு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் காவல் துறையினர், கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman stabbed the dance master to death in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->