பெண்ணை கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன் கைது..! - Seithipunal
Seithipunal


பெண்ணை கத்தியால் குத்திய கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உளனர். ரவிக்குமார் ஸ்ரீபெரும்புத்தூர் பகுதியில் வேலை செய்து வருவதால் காமாட்சி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயபிரகாஷ் என்பவருக்கும் காமாட்சிக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அது சில ஆம்ன்டுகளுக்கு முன் முறிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, காமாட்சியின் கணவர் பணிக்கு சென்ற நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜெயபிரகாஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே  அங்கிருந்த கத்தியால் காமாட்சியை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஜெயபிரகாஷை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested due to attempt Murder Near Ranipettai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->