ரெயிலை வழிமறித்து லோகோ பைலட்டை தாக்கிய வாலிபர் - செங்கல்பட்டில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ரெயிலை வழிமறித்து லோகோ பைலட்டை தாக்கிய வாலிபர் - செங்கல்பட்டில் பரபரப்பு.!

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் சென்றுக் கொண்டிருந்தது. இந்த ரெயில் செங்கல்பட்டு அருகே சென்றபோது இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் நின்றபடி ரயிலை வழி மறித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலைட் ரயிலை பாதி வழியில் நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் லோகோ பைலைட்டைத் தாக்கி, பின் ரயிலில் ஏறி அதனை இயக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த லோகோ பைலைட் உடனடியாக அபாய ஒலியை அடித்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீஸார் அந்த வாலிபரை கையும் களவுமாக சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில், அவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்ததால், மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என்று சந்தேகமடைந்துள்ளனர்.

இருப்பினும், சில சமயத்தில், அந்த நபர் தெளிவாகவும் பேசி வந்ததால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு, உட்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for attack train logo poilet in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->