திருப்பத்தூரில் பயங்கரம் : பேச மறுத்த மாணவி - தாய்மாமன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் பயங்கரம் : பேச மறுத்த மாணவி - தாய்மாமன் செய்த கொடூரம்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ஜீவிதா. கல்லூரி மாணவியான இவரும், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருடைய தாய் மாமன் சரண்ராஜும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இதற்கிடையே சரண்ராஜ் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்று தெரியவந்ததால் சரண்ராஜின் அக்கா ஜீவிதாவை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால், சரண்ராஜ் கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இருப்பினும், ஜீவிதா பேசுவதை தவிர்த்ததனால், ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். 

அதன் பின்னர், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தப்பித்துச் சென்றார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for kill woman in thirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->