ஈரோடு || 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமியிடம் தனசேகர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for raping 13 year old girl in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->