திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்த வாலிபர் போக்ஸோவில் கைது.!!  - Seithipunal
Seithipunal


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்த வாலிபர் போக்ஸோவில் கைது.!! 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை அருகே பதினாறு வயது சிறுமி ஒருவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த கவின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இந்நிலையில் கவின் அந்த சிறுமியிடம், திருமணம் செய்துகொள்வதாகவும் தன்னை பார்ப்பதற்கு ஆரல்வாயமொழிக்கு வருமாறும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ஆரல்வாய்மொழி சென்றுள்ளார்.

இதற்கிடையே வீட்டில் இருந்த தனது மகளை காணாததால் அந்த சிறுமியின் தந்தை சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில், கவின் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நாகர்கோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் இருவரையும் செல்போன் மூலம் தொடர்புகொண்டு கும்பகோணத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு கவின் மற்றும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை கவின் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் கவினை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு விசாரணை நடத்திய நீதிபதி, கவினை அடுத்த மாதம் 5ம் தேதி வரை புதுக்கோட்டை சிறையில் காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டார். அதன் படி போலீசார் கவினை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested pocso for promise of marriage in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->