கடலூர் : திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தீக்குளிப்பு.. சோகத்தில் குடும்பத்தினர்.!
Youth arson in unmarried despair
திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் ஆனந்த் குமார் (37 வயது) என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் ஆனந்த் குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர் ஆனாலும் அவருக்கு ஏற்ற பின் அமையவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆனந்த் குமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆனந்த் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth arson in unmarried despair