பரப்புரைக்கு பாம்புடன் வந்த இளைஞர் - சேலத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அதன் படி அவர், ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் மக்களை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருந்த போது அந்த கூட்டத்திற்கு வந்த ஒரு இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வயல் வெளியில் சுற்றித்திரிந்த நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, அதனை கழுத்தில் போட்டுக் கொண்டு பரப்புரை நடந்த பகுதிக்கு வந்தார். 

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததையடுத்து, அங்கு காவலுக்கு இருந்த போலீசார், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால், அந்த இளைஞர் பரப்புரை முடியும் வரை, அந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி வந்தார். அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth come election campaighn with snake in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->