ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை.‌. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (வயது 24) இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சில ஆண்டுகளாக காந்திராஜா ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தொடக்கத்தில் லாபம் பெற்ற இவர் பின் நாட்களில் பணத்தை இழக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் ஆன்-லைன் சூதாட்டத்தில் இவர் இதுவரை சுமார் ரூபாய் 2 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவில் மின்விசிறியில் கயிற்றின் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த நபர் நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். காந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அந்த குமரன் நகர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று காந்தி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commit suicide by online gambling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->