கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா(23). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு கமலி(20) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது.

அய்யப்பா திருமணத்திற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் இடம் 28,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை சரியான நேரத்தில் திருப்பி தர முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி அடைந்த அய்யப்பா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அய்யப்பாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commits suicide by hanging in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->