தூக்கில் தொங்கிய மூத்த மகன்.. இளைய மகனுடன் தாய் தற்கொலை முயற்சி.. மதுரை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!
Youth Committed Suicide In Thirumangalam
மூத்த மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தாய் மற்றும் தம்பி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவருக்கு பஞ்சவர்ணம் (40) மனைவியும் விக்னேஷ் , மணி என்ற இரு மகன்களும் உள்ளனர். கோவிந்தராஜ் ஈரோட்டில் வேலை செய்து வந்த நிலையில் பஞ்சவர்ணம் தனது மகன்களுடன் காளவாசலில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வேலை முடிந்து பஞ்சவர்ணம் அவரது இளைய மகன் மணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூத்த மகன் விக்னேஷ் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணமும் மணியும் கதவை அடைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூத்தமகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் பஞ்சவர்ணமும் மணியும் இதற்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Youth Committed Suicide In Thirumangalam