மது அருந்தியதை கண்டித்த தாய்… மகன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மது அருந்துவதை தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (32). என்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று அவரது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

இதனை கண்ட அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். மேலும், அவரிடம் கோபித்து கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், கார்த்திகேயன் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Committed Suicide Selam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->