காங்கிரீட் கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலி.. நள்ளிரவில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


காங்ட்ரீட் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கே. வினோத் கண்ணன். இவர்  தனது மனைவி, மகள், தந்தை ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வினோத் கண்ணன், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான PVC  கதவுகள் தயாரிக்கும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவதன்று இரவு வீட்டின் ஹாலில் தூங்கிகொண்டு இருந்துள்ளார்.  அப்போது அவர் மீது வீட்டின் காங்கிரீட் கூரை இடிந்து விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Death Near Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->