சீனாவில் இருந்து பொங்கலுக்கு ஊருக்கு வந்த இளைஞர் - மாடுமுட்டி உயிரிழப்பு.!
youth died in madurai jallikattu
சீன நாட்டில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன், எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died in madurai jallikattu