ஓடும் ரயிலிலிருந்து விழுந்த வாலிபர் பலி.! செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரோணிசேட்(24) என்ற வாலிபர் நேற்று முன்தினம் சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ரோணிசேட் ரயிலில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து செல்போன் பார்த்தபடி வந்துள்ளார்.

இந்நிலையில் கொருக்குப்பேட்டை-சீனிவாசபுரம் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மெதுவாக ரயில் சென்ற போது, அங்கு நின்றிருந்த வாலிபர்களில் ஒருவர் ரோணிசேட் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்பொழுது செல்போன் பாதிப்பை தடுக்க முயன்ற போது ரோணிசேட் ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரோணிசேட்டிடம் இருந்து செல்போன் பறித்தது சம்பந்தமாக இரண்டு பேரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth fell from a moving train and died in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->