சென்னையில் பயங்கரம் - நடைமேடையில் நடந்து வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!
youth harassment to women in chennai
தமிழகத்தில் கடந்த சில காலமாகவே பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இதில் ஏராளமான பள்ளி மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் வேலை முடித்து விட்டு கடற்கரையில் இருந்து மின்சார ரெயிலில் திருவொற்றியூருக்கு வந்தார். பின்னர், திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரை தாக்கியதுடன் கத்திக் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு சக பயணிகள ஓடிவந்ததால் அந்த வாலிபர் தப்பித்து ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வாலிபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth harassment to women in chennai