சார்ஜ் போட்டபடி செல்போனில் பேச்சு.. இளைஞருக்கு நேர்ந்த கதி.. சென்னையில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (22). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் காமராஜ், நேற்று இரவு பதினோரு மணியளவில் செல்போனில் சார்ஜர் போட்டபடி நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது, திடீரென மின்சாரம் தாக்கி காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த காமராஜர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed by electrocution due to putting his cell phone on the charger and taking with friend in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->