பந்தல் அமைத்தபோது விபரீதம்.! மின்சாரம் தாக்கி 2-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி.!
Youth killed by electrocution in selaiyur near
பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(24). இவர் கஸ்பாபுரத்தில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் அகரம்தென் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (25) என்பவரும் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் பந்தல் போடுவதற்காக கம்பியை உயர்த்திய போது எதிர்பாராத விதமாக அருகே சென்ற மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சீனிவாசன் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தார். மேலும் அரவிந்த்குமார் மாடியிலே விழுந்தார். இதையடுத்து பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed by electrocution in selaiyur near