மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
Youth killed electrocuted in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்து உள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பாலா(23). இவர் தனியார் நிறுவன ஹோட்டலில் பராமரிப்பு பணியில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் பாலா வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர், பாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed electrocuted in Perambalur