புதுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக் கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே பி.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சசிகுமாரை மர்மநபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமயம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிவகங்கை மாவட்டம் வடக்கு இளையாத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மஞ்சு விரட்டு முன் விரோதம் காரணமாக சசிகுமாரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே கொலை செய்த வெற்றிவேல் சிவகங்கை மாவட்டம் கீழ சேவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையயடுத்து போலீசார் சம்பவம் குறித்து வெற்றி வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் மஞ்சு விரட்டு முன்விரோதத்தில் சசிகுமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் போலீசார் கொலை சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? இந்த கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder in putukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->