வேலைபோன விரக்தியில் தற்கொலை முயற்சி - மலையிடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு...! - Seithipunal
Seithipunal


வேலையிழந்த விரக்தியில் விஷமருந்தி மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

மதுரை மாவட்டம், கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி.இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

சமீபத்தில் தொடர் விடுப்பு எடுத்ததன் காரணமாக அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், விரக்தி அடைந்த அவர் குட்டைமலை எனும் மலைப்பகுதிக்குச் சென்று விஷமருந்தி உள்ளார்.

இதில், சுயநினைவை இழந்து மலை இடுக்கில் சிக்கியவரை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2மணி நேரத்திற்கும் மேலாக போராடி, அவரை ஸ்ட்டெச்சரில் வைத்து கயிறு கட்டி கீழே கொண்டு வந்தனர்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth rescued in Mountain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->