இளைஞரின் உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி - கள்ளக்குறிச்சியில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ஜெயராமன். டிப்ளமோ படிப்பை முடித்துள்ள இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது அதீத மோகம் கொண்டிருந்ததால், கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜெயராமன், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த ஜெயராமன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth sucide for money loss in online rummy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->