"கழிவுநீர் தொட்டி" சுத்தம் செய்த இளைஞர் "விஷவாயு" தாக்கி பலி..! 3 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயுதாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (22). இவர் இதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் சம்பவத்தன்று வடநெம்மேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது இவர்கள் இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திடீரென விஷவாயுத்தாக்கி மணிஷ் மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக மணிஷை மிட்டு சிகிச்சைக்காக அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மணிஷ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மாமல்லபுரம் காவல்துறையினர், வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth who was cleaning a sewage tank was killed by poison gas in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->