சென்னை : சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து.. இளம்பெண் பரிதாப பலி..!
Youth woman death in accident
சரக்கு ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் தனது தோழிகளான தமிழரசி , ஐஸ்வர்யா ஆகியோருடன் அடையாறு ஆற்றின் பாலத்தில் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வேகதடையில் ஏறி இறங்கிய போது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது இருசக்கரவானகம் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசி உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபாரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth woman death in accident