வேலூர் | என்னடா இது தக்காளிக்கு வந்த சோதனை! அதிரவைக்கும் வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


லாரியில் தக்காளி ஏற்றி சென்றதை பார்த்த வாலிபர்கள் அதனை பின் தொடர்ந்து சென்று தக்காளி அதிக விலை விற்றதாக கூறி தக்காளியை வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: 

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த ஒரு மாதம் தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 1கிலோ, 2 கிலோ வாங்கிய காலம் போய் தற்போது, கால் கிலோ, அரை கிலோ என வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூரில் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி தக்காளியை ஏற்றிக் கொண்டு சென்றது. 

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் லாரியை துரத்தி சென்று, தக்காளி விலை அதிகமாக உள்ளதால் கொஞ்சம் தக்காளி போடுங்க ப்ளீஸ் என கேட்டதும், லாரியில் இருந்த நபர் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களுக்கு தக்காளிகளை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசினார். 

அதனை இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து, பின்னால் அமர்ந்து வந்தவரிடம் கொடுத்துள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் என்னய்யா இது தக்காளிக்கு வந்த சோதனை பார்த்தாயா? என நினைத்து சிரித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths caught tomato lorry


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->