யூட்யூபுக்கு நிரந்தர தடையா.?! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு கேள்வி.!
YouTube may ban
தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை யூட்யூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அரசிடம் எந்த மாதிரியான திட்டம் இருக்கிறது அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.
யூடியுப் தளத்தில் கள்ளச் சாராயம் தயாரிப்பது, வெடிகுண்டு தயாரிப்பது போன்ற பல விஷயங்கள் வீடியோக்களாக பதிவிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் எதன் அடிப்படையில் அவர்கள் செய்கிறார்கள்? இதற்காக அரசு என்ன தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளது?
ஒருவர் தவறு செய்ய தூண்டினால் சட்டப்படி யூடியூப் கூட குற்றவாளிதான். எதை வேண்டுமானாலும் யூட்யூபில் ஒளிபரப்புவது ஞாயமா? வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்து இதுபோன்ற வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லது யூடியுப் தளத்தை மொத்தமாக அரசு தடை விதிக்க வேண்டும்." என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.