யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்த சென்னை காவல்துறை!
Youtuber Irfan Fine chennai police
அண்மையில் நடிகர் பிரசாந்த் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது யூடியூபர் இர்ஃபானுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரபல கார்ப்பரேட் youtube சேனல் ஒன்று நடிகர் பிரசாந்த்தை அண்மையில் பேட்டி எடுத்திருந்தது. இதில், இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் நடிகர் பிரசாந்த் தலைக்கவசம் அணியாமல் பாண்டிபஜார் பகுதியில் செல்வதையும் வீடியோவாக எடுத்து பதிவிடப்பட்டிருந்தது.
இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் நடிகர் பிரசாத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதனை அடுத்து சென்னை போக்குவரத்து போலீசார் அவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் என்றால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆளுங்கட்சியின் ஆதரவோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று, அவர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, சென்னை போலீசருக்கு கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும் எப்போது பார்த்தாலும் டிடிஎஃப் வாசன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் போலீசார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று, செல்வப் பெருந்தகை தலைக்கவசம் அணியாமல் இருக்கும் காணொளியையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1,000, நம்பர் ப்ளேட் சேதம் அடைந்திருந்ததால் ரூ.500 அபராதம் என மொத்தம் ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
English Summary
Youtuber Irfan Fine chennai police