யூடியூபர் இர்பான் வீடியோ விவகாரம் : மருத்துவ கவுன்சில் பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில்,  மருத்துவமனையில் வீடியோ எடுக்க அனுமதித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் தனது யூடியூப் சேனலில் பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார்.

கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், மருத்துவமனையில் வீடியோ எடுக்க அனுமதி அளித்த டாக்டர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youtuber irfan video issue medical council sensational order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->