பிரபல யூடியூபர் TTF வாசன் மீண்டும் கைது.. செல்போன் பேசிக்கொண்டு கார் ஒட்டியதாக வழக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


2K கிட்ஸ்களிடையே மிகவும் பரிட்சயமான பெயர் TTF வாசன். கோவையிலுள்ள ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த இவர், தற்போது 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களைக் கொண்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

TTF வாசன் தேசிய நெடுஞ்சாலைகளில் 250 கி.மீ  வேகத்தில் பைக் ஓட்டுவது, வீலிங் செய்வது போன்ற சாகசங்களை செய்து இன்றைய இளைஞர்களை கவர்ந்துள்ளார். இது தவறான வழிகாட்டுதல் என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.

இந்நிலையில் TTF வாசன் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஆனால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்பட்டதால் மருத்துவமனையில் வைத்தே போலீசார் TTF வாசனைக் கைது செய்தனர்.

அதன் பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது காரில் ஊர் ஊராக சுற்றி வரும் அவர், தான் பழையபடி திரும்பி வந்து விட்டதாக ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதையடுத்து மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஒட்டியதாகவும், மேலும் கார் டேஷ்போர்டில் உள்ள கேமராவில் அதை வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் கூறி போலீசார் 6 பிரிவுகளில் TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youtuber TTF Vasan Arrested for Driving Card While Using Mobile


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->