மாதம் இனி ரூ.349 கட்டவேண்டும்! வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த ஏர்டெல்!  - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: 

அன்லிமிடெட் கால், இரண்டு ஜிபி டேட்டா உடன் 28 நாள் வேலிடிட்டி கொண்ட 179 ரூபாய் பேக், தற்போது 199 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டிக் கொண்ட பிளான், 455 ரூபாயிலிருந்து 509 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு வருடம் வேலிட்டி கொண்ட பிளான் 1799 ரூபாயிலிருந்து 1999 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

மேலும், பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய நாள்தோறும் ஒன்றரை ஜிபி, அன்லிமிடெட் கால், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 299 ரூபாய் பிளான், தற்போது 349 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

மேலும் தினம்தோறும் 1 ஜிபி, அன்லிமிடெட் கால், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 265 ரூபாய் பிளான் 299 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் 1 ஜிபி டேட்டா ADD-ON 19 ரூபாயிலிருந்து 22 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விதமான பிளான்களும் தற்போது முன்பை விட அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இது குறித்த விவரங்கள் கீழ் உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக நேற்று ரிலையன்ஸ் ஜியோ 5G பயனர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் அன்லிமிட்டட் ப்ளான்களை வெளியிட்டுள்ளது.

அதில் 1.5 GB / 28 days பிளான் இனி 299 ருபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிவிப்பின்படி, மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் கட்டணம் 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189 ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airtel Monthly plan changed june 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->