ஆப்பிள் ‌ஐபோன் 14 சீரிசில் சிம் கார்டு ஸ்லாட் நீக்கம்: விரைவில் இ சிம் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின், ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஐபோன் 15 சீரிசில் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் மாடல்களில் இ சிம் மற்றும் போர்ட்-லெஸ் மாடலை கொண்டு வருவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது.

இந்த முறை இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. இதன் மூலம் பயனர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்ப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் இ சிம் நிஜ சிம் கார்டு தேவையின்றி அதன் சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இ சிம் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனமும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple brand remove SIM card slot in iPhone 14 series


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->