கார்மின் ஃபோர்-ரன்னர் 955 | ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ரூ.13 ஆயிரம் விலை குறைப்பு.!
Garmin Fore Runner Series Smartwatch price reduction
கார்மின் நிறுவனம் கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜி.பி.எஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
இந்த சலுகைகள் ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகை விற்பனையை பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம்.
![](https://img.seithipunal.com/media/ncdfh.png)
சலுகை விவரங்கள்:
கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/fhsrth.png)
கார்மின் ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Garmin Fore Runner Series Smartwatch price reduction