5ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்தது என்ன? 1ஜி முதல் 5ஜி வரை - விரிவான அலசல் ரிப்போர்ட்!
India 5G spectrum auction detail report
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட 5ஜி அலைகற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அது குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். அதுக்கு மொதல்ல 1G , 2G , 3G , 4G-ன்னா என்னனு பார்க்கலாம் வாங்க.
1ஜி : ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே செய்தியை பரிமாறி கொள்ள முடியும். சிறந்த எ.கா காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாக்கி டாக்கி. ஒருவர் பேசி முடித்த பின் தான் மறுமுனையில் இருந்து பேச முடியும். ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
2ஜி : ஒரே நேரத்தில் இருவரும் தகவலை பரிமாறி கொள்ளலாம். எ.கா கைபேசி. இதில் Voice கால் சேவை மேம்படுத்தப்பட்டது. அதாவது 1ஜி யில் அனலாக் வாய்ஸ் தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், 2ஜியில் தான் டிஜிட்டர் வாய்ஸ் கால் சேவை அறிமுகப்படுத்தபட்டது( GSM, CDMA ).
3ஜி : வாய்ஸ் கால் தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இணையத்தின் வேகத்தை மட்டும் அதிகமாக்கி அறிமுகப்படுத்தினர்கள். ஆனால், வீடியோ கால் பேச கூடிய வசதியை உருவாக்கினார்கள்.
4ஜி : LTE என்ற என்ற புதிய தொழில்நுட்பத்துடன் அதிவேக இணைய சேவையும், வாய்ஸ் காலின் தரமும் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுதப்பட்டது. பெரும்பாலானோர் தற்போது 4ஜி சேவையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் 5ஜி சேவை வந்துள்ளது. இது 4G வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் இணைய சேவையை வழங்க இருக்கிறது. 5 ஆவது தலைமுறையான 5G தொழில்நுட்பத்தில் 10 Gbps பேண்ட்வித்தும் , சராசரியாக 150 Mbps வேகத்தில் இணைய சேவை இயங்க கூடியதாகவும் இருக்கிறது. அதாவது 1GB கொண்ட திரைப்படத்தை இனி 10 வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள் பதிவிறக்க முடியும்.
5ஜி அலைகற்றத்திற்கான ஏலம் கடந்த மாதம் இறுதியில் நடந்தது. அதாவது ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய ஏலம் ஏழு நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளான ஜூலை 26 அன்று ரூ.1.45 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனது. அதை தொடர்ந்து 40 கட்டமாக நடந்த ஏலத்தின் முடிவில் சுமார் ரூ.1.50 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது மத்திய அரசுக்கு ரூ.1,50,173 கோடி மட்டுமே 5ஜி ஏலத்தால் கிடைத்தது.
அலைக்கற்றைக்கான தொகையை அரசாங்கம் தவணை முறையில் தான் பெறும். முதல் ஆண்டில், ரூ133.7 பில்லியன் அரசாங்கம் பெறும். மொத்த ஏலத் தொகையான ரூ.1,50,173 கோடியை 20 தவணைகளாகச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி க்கான 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 51,236 மெகா ஹெர்ட்ஸ் (71%) மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. 4ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகையை விட இந்த ஆண்டுக்கான 5ஜி ஏல தொகை இரு மடங்கு அதிகம். 4ஜி அலைக்கற்றைக்கான மொத்த ஏலம் ₹ 778.2 பில்லியன் ஆகும். மேலும் , 2010 இல் நடைபெற்ற 3G க்கான அலைக்கற்றை ஏலத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் இந்த ஆண்டு நடத்த 5ஜிக்கான ஏலம்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் விற்கப்பட்ட மொத்த அலைக்கற்றைகளில் கிட்டத்தட்ட பாதியை அது வாங்கியது. ஜியோநிறுவனம் 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 3,300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் என்ற ஐந்து பேண்டுகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் (MHz) அலைக்கற்றைகளை மொத்தமாக ரூபாய் 880.8 பில்லியன் ஏலம் எடுத்தது.
ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கு மொத்தம் ₹ 430.8 பில்லியன் தொகைக்கு ஏலம் எடுத்தது. அதே போல வோடபோன்- ஐடியா நிறுவனம் 6,228 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கு மொத்தம் ₹ 188 பில்லியன் ஏலம் எடுத்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதானி நிறுவனம் 26 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட அலைக்கற்றையை ரூ. 2.1 பில்லியன் ஏலம் எடுத்தது. இது தொலைபேசி சேவைகளுக்குப் பயன்பட வாய்ப்பில்லை. இதை கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு மட்டும் தனி நெட்வொர்க் உருவாக்க வாய்ப்பு இருகிறது.
3ஜி, 4ஜி அலைக்கற்றைகளுடன் ஒப்பிடுகையில் 5ஜி அலைக்கற்றை ஏலமானது ரூபாய் 5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று நடுவண் அரசு கூறியது. ஆனால் ரூ.1,50,173 கோடி மட்டுமே 5ஜி ஏலத்தில் கிடைத்துள்ளது என்பது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
மேலும், 5ஜி சேவைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவரும் என்றும், இன்னும் வரும் 2-3 ஆண்டுகளில் இந்தியா முழுக்க 5G கவரேஜ் கிடைக்கும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
India 5G spectrum auction detail report