இன்ஸ்டாகிராமில் புதிய வசதி வெளியீடு.. இனி முகநூல் போல இதையும் செய்யலாம்.!
Instagram notes update
தற்போதைய காலகட்டத்தில் எல்லோருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தரத்தினை மெட்டா நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. உலக பேமஸான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்ட ரீல்ஸ் அப்டேட் தான் தற்போது மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் அடுத்தடுத்து பயனாளர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இன்ஸ்டாகிராம் நிறுவனம் அப்டேட் கொடுத்து வருகின்றது. சமீபத்தில் ஸ்டோரி வைப்பதற்கான டியூரேஷன் நேரத்தை நீட்டித்தது.
அதே வரிசையில் தற்போது நோட்ஸ் என்று ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பயனாளர்கள் 60 எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகளை பதிவிட முடியும். ஒரு நேரத்தில் ஒரு நோட்ஸ் மட்டுமே வெளியிடலாம். இந்த நோட்ஸ் 24 மணி நேரம் கழித்து தானாகவே அழிந்து விடும். இதுதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வந்துள்ள புதிய அப்டேட் ஆகும்.