ஏவுகணை சோதனை வெற்றி...! இந்தியாவின் ஐ.என்.எஸ் சூரத் போர்க்கப்பல்...!
Missile test success Indias INS Surat warship
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலிலிருந்து ஏவுகணை செலுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படை, இந்த சோதனையில் வானத்திலுள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சோதனை வெற்றி இந்திய கடற்படைக்கு மேலும் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும், விமானம் மற்றும் தரையிலிருந்து கப்பலை தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும் என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி:
பிரதமர் நரேந்திர மோடி,"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
மேலும், கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பதிலடி கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.மேலும், இந்திய தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் பாகிஸ்தான், ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கடற்படை நடத்திய சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இது தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Missile test success Indias INS Surat warship