வாட்ஸ் அப்பில் புதிய வசிதி - இனி ஸ்கிரீன் ஷேர் செய்யலாம்! - Seithipunal
Seithipunal


உலக அளவில் அதிக பயணர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி விரைவில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி பல புதிய வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வீடியோ கால்களின் போது ஒரு பயணர் தன்னுடைய மொபைல் ஸ்க்ரீனை மற்றொருவருக்கு பகிர்ந்து கொள்ள முடியும் வகையில் அந்த வசதி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சோதனை முறையில் இருந்து வரும் இந்த புதிய அம்சம், விரைவிலேயே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியை நீங்கள் ஆன் செய்து விட்டால் உங்கள் போனில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை அனைத்துமே வீடியோ காலில் இருக்கும் மற்றொரு நபரால் அவரது செல்போன் திரையில் பார்க்க முடியும். 

இந்த  ஸ்கிரீன்ஷேர் வசதியானது வாட்ஸ்அப் பயணர்கள் வீடியோ கால் பேசும்போது செல்போன் திரையின் கீழ்ப்பக்கத்தில் தோன்றும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயணர்களுக்கு புதிய கால் பேக் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மிஸ்டு கால்கள் வரும் பட்சத்தில் நேரடியாகவே அவர்கள் கால் பேக் வசதியை பயன்படுத்தி கால் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல இன்ஸ்டாகிராமில் “சேனல்” என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.  இதன் மூலம் இன்ஸ்டா கிரியேட்டர்கள் புதிய பதிவுகளை தினமும் தங்களது ஃபாலோயர்களுக்காக போஸ்ட் செய்ய முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New feature on WhatsApp - now you can screen share


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->