நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்! நிறை என்ன ? குறை என்ன? - Seithipunal
Seithipunal


நிசான் நிறுவனம், மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.5.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,  மேலும் இந்த விலை முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் ஆறு வேரியண்ட்களில், இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.1.0 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு மாடல்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

NA பெட்ரோல் 71 ஹெச்பி பவருடன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும், மற்றும் டர்போ பெட்ரோல் 99 ஹெச்பி பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT யூனிட் ஆகியவையாக இருக்கும். புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங், மற்றும் ஓட்டுநர் இருக்கை உயரம் அட்ஜஸ்ட் செய்யும் வசதிகளுடன் கூடியது. 

இந்த புதிய மேக்னைட், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க, தற்போதைய மாடல்களுக்கு முந்தைய மேம்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மாடல் கார் அதிக அளவில் விற்பனையாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nissan Magnite Facelift Launched in India What Special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->